ரஷ்யாவின் ஐ.எல் .18 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு  செயலகம் தகவல் தெரிவித்திருந்தது.

எனினும் மீண்டும் குறித்த அறிக்கையை திருத்தம் செய்து 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விமானம் பயணிக்கும் போது விமானத்தில் சுமார் 32 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண காலநிலைக்காரணமாக குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் ஐவர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுவதுடன், விபத்து இடம்பெற்ற இடத்துக்கு 8 ஹெலிகொப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.