ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கட்டார் நாட்டிற்கு கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் எகிப்து,லெபனான் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பயணப்பையில் மற்றும் ஆடைகளில் அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோ நாணயதாள்கள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.