- ஆர்.யசி 

நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பது செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றி கொள்வதற்கு எதிரானவர்கள் தவிர ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக தனக்கு எவ்வித பிரச்சினைகளும் இருக்கவில்லை என்று அவர் கூறினார். 

ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அமைப்புகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.