பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்களை காவு கொண்ட கோர விமான விபத்து ; கடைசி தருணத்தில் ஆசனம் மாறியதால் உயிர் பிழைத்த வீரர்

Published By: Raam

18 Dec, 2016 | 12:43 PM
image

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள்.

குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான  செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை விமானத்தில் கடைசி ஆசனத்தில் அமர்ந்திருந்தேன்.

அப்போது என்னிடம் வந்த கால்பந்து சங்க தலைவர் கடு கௌசோ ,நீங்கள் முன் ஆசனத்திற்கு சென்று அமருங்கள். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சிலர் அமர உள்ளார்கள் என கூறினார்.

நானும் முன் ஆசனத்திற்கு வந்து அமர்ந்தேன். பின்னர் சில நிமிடங்களில் நடந்த விபத்தில் பின் ஆசனத்தில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள்.

நான் முன் ஆசனத்திற்கு வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35