மலேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்க்கு சொந்தமான யுஎல்315 விமானத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.10 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மலேசியா ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பல்வேறுமட்டத்திலான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி, இன்று காலை அந்நாட்டின் மன்னர் சுல்தானை சந்தித்து இருநாட்டு அரச கொள்கைள் தொடர்பாகவும், பொருளாதார உடன்பாடுகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.