(லியோ நிரோஷ தர்ஷன்)

அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களையம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தமக்குறிய கடமைகளை சிறந்த நிலையில் முன்னெடுக்கின்ற நிலையில் அமைச்சரவையில் திடீர் மாற்றகங்களை ஏற்படுத்துவது எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் எனவே அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.