பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் அந்­நாட்டில் வெள்ளத்தால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள யோர்க் நக­ருக்கு திங்­கட்­கி­ழமை விஜயம் செய்து நிலை­மை­களை நேரில் பார்­வை­ யிட்டார்.

வட இங்­கி­லாந்­தி­லுள்ள பல நகர்­களும் கிரா­மங்­களும் இந்த வெள்ள அனர்த்­தத்தால் பாரிய பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளன.

யோர்க்கில் சுமார் 500 கட்­டடங்கள் வெள்ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

பிரித்­தா­னி­யாவின் முக்­கிய சுற்­றுலா பிராந்­தி­யங்­களில் ஒன்­றாக விளங்கும் யோர்க் நகரில் இரு ஆறுகள் பெருக்­கெ­டுத்­துள்­ளன.

இந்­நி­லையில் மேற்­படி வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி வெளி­யேற முடி­யாத நிலை­யி­லுள்ள மக்­களை பாது­காப்­பாக வெளி­யேற்றும் செயற்­ கி­ர­மத்தில் அந்நாட்டு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.