முதல்வரிடம் கோரிக்கை விடுத்த விவேக்.!

16 Dec, 2016 | 03:54 PM
image

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயல் ஏகப்பட்ட மரங்களை வேரோடு சாய்த்துள்ளது.

பசுமையை இழந்து தவிக்கும் சென்னையை மீண்டும் பசுமையாக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், விவேக் இன்று இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு விவேக் கூறும்போது, புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

மேலும், அவ்வாறு நடப்படும் மரங்களில் அரச மரம், வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நடவேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இவரது கோரிக்கையை முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37