முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை கோழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.