ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களில் 7592 பாரிய குற்றச் செயல்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  பொலிஸ் தலை­மை­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. 

பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்­திரம் பாரிய குற்­றச்­செ­யல்கள் 575 ஆக பதி­வா­கி­யுள்­ள­துடன் அவற்றில் மனி­தப்­ ப­டு­கொலை சம்­ப­வங்கள் 39, பாலியல் குற்­றங்கள் 198, வீடு­களை உடைத்தல் 153, கொள்ளைச் சம்­ப­வங்கள் 64 மற்றும் திருட்டுச் சம்­ப­வங்கள் 121 பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்­துடன் ஒப்­பிடும் போது 

90 குற்றச்செயல்கள் குறை­வ­டைந்­தி­ருப்­ப­தா­கவும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதி­வான பாரிய குற்றச் செயல்­களில் அதி­க­ள­வா­னவை மேல் மாகா­ணத்தில் பதிவா­கி ­யி­ருந்­த­துடன், அவற் றின் எண்­ணிக்கை 170 ஆக உள்­ள­துடன் மேல் மாகா­ணத்தில் நுகே­கொட தொகு­தி­யி­லேயே அதி­க­ள­வான குற்றச் செயல்கள் பதி­வா­கி­யுள்­ளது என அவ் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.