ஹம்பாந்தோட்டை சம்பவம் யாழில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது : மஹிந்த

Published By: MD.Lucias

15 Dec, 2016 | 06:28 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனினும் இவ்வாறான நடவடிக்கைள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்போது வேறுவிதமாகவே அது கையாளப்படுகிறது. கடற்படையைச் சேர்ந்த இருவரை அங்குள்ளவர்கள் தடுத்துவைத்திருந்தபோதும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்களை மீட்பதற்கு கடற்படை அனுப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டுவதற்கு கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த செயலமர்வு இன்று பத்தரமுல்லையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

 அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நடைபெறும் ஆட்சி முறை பற்றி தற்போது அனைவருக்கும் நன்கு தெரியும். நாட்டில் தற்போது ஸ்திரத்தன்மை இல்லை. அவ்வாறான கால கட்டத்திலேயே நாம் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மேலும் தற்போது பொலிஸ் ஆட்சியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜனநாயம் பற்றிப்பேசிக்கொண்டிருக்கிடின்றனர். ஆனால் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றனர். 

கடந்த கால மோசடிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துக்கொண்டு மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

மேலும் நாட்டின் பொருளாதார நிலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளது. தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உள்ள தொழில்வாய்ப்புகளையும் இல்லாமலாக்குகிறது. 

தொடர்ச்சியாக தொழிலாளர்களின் உரிமைகளை நீக்கிக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு போராடும் போது அதற்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் வழங்காது கடற்படையினரைக்கொண்டு கட்டுப்படுத்துகின்றனர். 

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பபட்ட தாக்குதலை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. இதற்கு முன்னர்  இவ்வாறு கடற்படையினரைக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்திய சந்தர்ப்பங்கள் பதிவாகவில்லை.

நாட்டில்  யுத்தம் இல்லை, வேறு விதமான அச்சுறுத்தல்களும் இல்லை எனக்கூறிக்கொண்டே அரசாங்கம் படை முகாம்களை அகற்றுகிறது. அவ்வாறெனில் ஆர்பாட்டக்காரர்களை ஏன் கடற்படையைக்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59