தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்ததுபோல் நாட்டை விற்பதாக கூறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு என்ன தகுதி உள்ளது.

அவர் விற்காத காணியையா நாங்கள் விற்றோம் என்பதை கேட்க வேண்டும். எவ்வித பொறுப்புணர்வுமின்றி தேசிய பிரச்சினைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதால் ஆட்சியை கவிழ்க்க முடியாதென்பதை நினைவில் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகுகிறார் என்றும் இந்தியாவைப் போன்று பணச்சலவை செய்ய 5000 ரூபாவை இல்லாமலாக்க போவதாகவும் எவ்விதமான அடிப்படை ஆதாரங்களுமற்ற விடயங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வது மத்திய வங்கியில் பணிபுரியும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் நிவாட் கப்ராலின் சகாக்களே காரணம் எனவும் விரைவில் இவ்வாறு மத்திய வங்கியின் பிரச்சினைகளை பூதாகரமாக மாற்றும் நபர்களின் பெயர்களை வெளியிடுவேன் எனவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.