ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது

Published By: Priyatharshan

15 Dec, 2016 | 04:01 PM
image

( எஸ்என்.நிபோஜன் )  

கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்தில் கூடுதலான மதுபானப் போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அனுமதிப்பத்திரம்  இன்றி  சட்டவிரோதமாக விற்பனை  செய்த  குற்றச்சாட்டிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 18 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41