போலி பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அச்சுறுத்தியதாக கூறப்படும் இளைஞரின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இளைஞரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட இளைஞர் 26 வயதுடைய, காலி - ரத்கம பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.