நட்­சத்­திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீரர் விருதை தன­தாக்­கி­யுள்ளார்.

குளோப் கால்­பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடை­பெற்­றது. இதன்­போது கால்­பந்து வீரர்கள், பயிற்­சி­யா­ளர்கள், துறைசார் சாத­னை­யா­ளர்கள் மற்றும் கழ­கங்கள், ஆகிய பிரி­வு­களில் பிர­கா­சித்­த­வர்­க­ளுக்கு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

அத­ன­டிப்­ப­டையில் பார்­சி­லோனா கழக அணிக்­காக விளை­யாடி வரும் ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த 28வய­தான நட்­சத்­தி­ர­வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருதை சுவீ­க­ரித்­துக்­கொண்டார்.

ஆண்டின் சிறந்த கழ­க­மாக பார்­சி­லோனா தெரிவு செய்­யப்­பட்­ட­தோடு இத்­தா­லியின் கால்­பந்து ஜாம்­பவான் அன்­றியா பிலோ மற்றும் இங்­கி­லாந்­தைச்­சேர்ந்த பிராங் லம்பேர்ட் ஆகியோர் துறைசார் சாத­னை­யா­ள­ருக்­கான விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர்.

கால்­பந்து முக­வ­ருக்­கான விருதை போர்த்­துக்­கலின் ஜோர்ஜ் மெண்டிஸ், சிறந்த நடு­வ­ருக்கான விருதை ரவ்சான் இமார்டோவ், சிறந்த பயிற்­சி­யா­ள­ருக்­கான விருதை மார்க் வில் மோர்ட்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.