கட்சியின் செயலாளர் தொடர்பில் இன்று அறிவிக்கப்போவதில்லை.!

Published By: Robert

15 Dec, 2016 | 09:41 AM
image

Image result for ரவூப் ஹக்கீம் virakesari

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பது பற்றி தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்போவ தில்லை. அவ்வாறு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக் குழு கோரவுமில்லை. எனினும் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பில் சில தெளிவுகளையே ஆணைக்குழு கட்சியிடம் கோரியுள்ளது. எனவே அது தொடர்பில் ஆணைக்குழுவை இன்று தெளிவுபடுத்தவுள்ளளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக்கூட்டம் நேற்று மாலை 6.15 முதல் இரவு 9.45 மணி வரை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் விடயம் தொடர்பில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் அதன்போது இடம்பெற்றன. இருந்தபோதிலும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை. உயர்பீடக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலியை இன்று சந்திப்பதற்கு நான் தயாராக உள்ளேன். எனவே அவர் என்னைச் சந்தித்து செயலாளர் விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கலாம். அவருடனான சந்திப்பின் பின்னரே அவர் சம்பந்தமான விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியம். எனினும் கடந்த பேராளர் மாநாட்டின்போது கொண்டு வரப்பட்ட யாப்பு திருத்தத்தின் மூலமே உயர்பீடச் செயலாளர் அறிமுக்கப்படுத்தப்பட்டார். ஆகவே அப்போது கொண்டு வரப்பட்ட யாப்புத் திருத்தம் உரிய முறையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர் பீடக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே செயலாளர் விடயத்தில் மாற்றம் எதனையும் கொண்டு வருவதாயின் அது பேராளர் மாநாட்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். யாப்புத் திருத்தத்தின் மூலமே அதனை கொண்டுவர வேண்டியள்ளது.

எனவே கட்சியின் யாப்புக்கு இணங்க தீர்வுகளை ஆராய்வதற்கு கட்சி தயார். ஆகவே கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் இரண்டாம் திகதி கூடி திருத்தங்கள் தொடர்பிலும் பேராளர் மாநாடு தொடர்பிலும் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02