இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் தொகையை அதிகரிப்பதற்காகவும் அவ்வாறு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எமது நாட்டினது பாரம்பரிய அம்சங்களை எடுத்து காட்டும் நோக்கில் இம்மாதம் 20 முதல் 24 ஆம் ஆம் திகதி வரையில் கொழும்பில் சுற்றுலா வலயமொன்றை நிர்மாணிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.