நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது.

லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. 

அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அதிகூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன. 

அதேநேரம் வடக்கு கிழக்கில் மலையகத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிதல்களை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புலம்பெயர் தரப்பினரிடையான உறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.