வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரொருவர் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவத்தினால்  தென்னாப்பிரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் குறித்த நபர் கார் விபத்தில் சிக்குண்டு படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

பின்னர் உறவினரிடம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறி சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

எனினும் மறுநாள் பிரேத அறையில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபரின் உடல் அசைவதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளார்.

உடனடியாக வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது இதய துடிப்பு குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டு, குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பத்தில் உயிரிழந்த நபர் 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.