அம்பாந்தோட்டை - திஸ்ஸ பிரதான வீதியினை மறித்து பிரதேச வாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாந்தோட்டையில் உள்ள காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தால் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.