(லியோ நிரோஷ தர்ஷன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர் என்ற வகையில் கட்சியின் எதிர்காலம் முக்கியமானதாகும். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக் கொள்ளும் நிலைப்பாட்டில் நானில்லை. எனவே கட்சிக்குள் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

கட்சியின் உச்ச பீடத்தின் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள போதிலும் நிகழ்ச்சி நிரலை அறியாத நிலையே காணப்படுகின்றது. எவ்வாறாயினும் கட்சியின் பிரச்சிணைகளை தீர்த்துக் கொள்ள முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராகவே உள்ளேன். அதேபோன்று எனக்கு எதிராக இடம்பெற கூடிய விடயங்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீடம் நாளை கூடுகின்ற நிலையில் அது குறித்து தெளிவுப்படுத்தும் போதே செயலாளர் நாயகம் ஹசன் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.