லசித் மலிங்கவின்; உடற்தகுதி பரிசோதனை மீண்டும் நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நத்தார் தினத்தன்று (25) அவருக்கு மேற்கொள்ளப்படவிருந்த  உடற்தகுதி பரிசோதனை  மேலும் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழங்கால் காயம் காரணமாக அவர் நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.