வவுனியா நெளுக்குளம் பொலிஸார் இன்று காலை கசிப்பு காய்சிய ஒருவரை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை 6.00  மணியளவில் வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலமையிலான குழுவினர் டிஸ்கோ சந்தி , தம்பனைப்புளியங்குளம் சந்தி காட்டுப்பகுதிக்குள் மறைத்து கசிப்பு காச்சிய  39 வயதுடைய ஒருவரையும் ஆறு போத்தல் கசிப்பு , கோடா , கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர்  நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.