(சசி)

மட்டக்களப்பு, பாசிக்குடா சங்கிலிப்பாலம் என அழைக்கப்படும் இடத்தில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாசிக்குடாவில் இருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற காரும் வாழைச்சேனையில் இருந்து பாசிக்குடா நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெறுள்ளது. 

இச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் இடம்பெறாத நிலையில், இருவாகனங்களும் பாரிய சேதத்துக்கு உள்ளாகி உள்ளன.

இவ் விபத்துத் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.