மட்டுவில் கடல் பெருக்கு மீனவர்கள் பாதிப்பு !!

Published By: Raam

11 Dec, 2016 | 11:35 AM
image

கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்ததன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

சுமார் 200 மீற்றர் வரை கடல் நீர் கிராமத்துக்குள் வந்துள்ளது இதன் காரணமாக நாவலடி கடலாட்சி அம்மன்  கோவிலுக்கு முன்னாள் செல்லும் பிரதான பாதை நீரில் மூழ்கி காணப்படுகின்றது .

இது தொடர்பாக  நாவலடி பிரதேச மீனவர் கருத்து தெரிவிக்கையில் வருடம் தோறும் இது போன்று கடல் பெருக்கு ஏற்படுவது  வழமை ஆனால் இம்முறை சற்று அதிகரித்துள்ளது .

தற்போது எமக்கு தொழில் செய்வதற்கு முடியாத நிலை உள்ளதாகவும் மீனவர்களிடம் எந்தவித கேள்விகளும் கேட்க்காமல் ஆத்துவாய் வெட்டியதன் காரணமாக தற்போது மிகவும் கஷ்ட்டமான சூழ்நிலையில் தள்ளப் பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார் .

வாவியில் இருந்த மீன்கள் அனைத்தும் கடலில் ஓடிவிட்டது அன்றாடம் தொழில் செய்யும் எம்மிடமும் ஆத்துவாய் வெட்டுவது தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும்  .எமது துன்பம் அரச அதிகாரிகளுக்கு புரியாது .

எமக்கு இந்த அரசாங்கம் எதாவது வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் இன்று எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் திண்டாடுவதாக மீனவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோர தாண்டவம் ஆடிய சுனாமியில் அதிகமாக பாதிக்கப்பட்டும் அதிக உயிர்களை இழந்த கிராமம் நாவலடி என்பதுடன் தற்போது கடலை நம்பி 120 குடும்பங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27