வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில்  இன்று மதியம் 1.45மணியளவில்  சாரதிபயிற்சி முச்சக்கரவண்டியோன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தினை நேரில் பார்த்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

யங்ஸ்டார் மைதான வீதியுடாக வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி அசிஸ்டியா நிறுவனத்திற்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட வேளை வவுனியாவிலிருந்து வைரப்புளியங்குளம் வீதியுடாக பயணித்தக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.

எனினும் இச் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.