துறைமுக அதிகார சபையில் தம்மை இணைத்துக்கொள்ளுமாறு மாகம்புர மேலாண்மை தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அம்பாந்தோட்டை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தின் போது ஊழியர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையிலேயே பதற்ற நிலை எற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்படை பேச்சாளர் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை சுமுகமான முறையில் கலைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகம்புர மேலாண்மை தனியார் நிறுவன ஊழியர்கள்  483 பேர் நேற்று முன்தினத்திலிருந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.