அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி மாதம் முதல் வாரமளவில் பரந்தளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஜனவரி மாதம் 4ம் திகதி கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா கூறினார். 

தமது பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்ததாகவும்,இருப்பினும் தமது பிரதான கோரிக்கைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்வு ஒன்று கிடைக்கவில்லை, அதன் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்க வேண்டி உள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.