தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி மரணமடைந்தார். அன்று அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது இல்லமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சசிகலா உறவினர்கள் விருந்து சாப்பிட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு உயர் பெண் பொலிஸ் அதிகாரி இது குறித்து விவரித்துள்ளார். 5 ஆம் திகதி மாலை வரிசையாக காரில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் வந்து இறங்கினார்கள்.

அவர்களை உள்ளே விட குழப்பமாக இருந்ததால் நாங்கள் சசிகலாவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு செய்து கேட்டோம். அனுமதியுங்கள் என அவர் உத்தரவிட்டார். அவர்கள் அனைவருமே இனிமேல் போயஸ் கார்டன் பக்கமே வர கூடாது என ஜெயலலிதாவால் சில வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கப்பட்டவர்.

வீட்டிற்குள் வந்த அவர்கள் சுற்றுலா தளம் போல வீடை சுற்றி பார்த்தனர். ஆலங்கார அறைக்குள் சென்று அலங்கரித்து கொண்டனர். அவர்களுக்கு உணவு தயாரானது. அவர்கள் தங்களுக்கு தேவையானதை சமைக்க சொல்லி இஷ்டப்படி சாப்பிட்டார்கள்.

ஜெயலலிதா அபாயகட்டத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நாங்கள் யாரும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்தோம் என அவர் கூறினார். ஆனால் சசிகலா, இளவரசியின் உறவினர்கள் ஜெயலலிதா உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிலேயே விருந்து சமைக்க சொல்லி சாப்பிட்டிருக்கிறார்கள். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.