டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம்

Published By: Digital Desk 5

09 Dec, 2022 | 09:05 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பில் அரச தரப்புக்கும் எதிர்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்கு  எதிரான வாய் மூல வன்முறைகள் ,துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதால் தமக்கு சபையில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு பெண் பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (09) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்து  எழுந்த ஆளும் தரப்பு உறுப்பினர் சமன் பிரிய ஹேரத்,இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார மிகவும் ஆபாசமாக பேசினார். எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார். இதனையடுத்து எழுந்த ஆளும் தரப்பு உறுப்பினர் கோகிலா குணவர்தனவும் அதே கருத்தை முன்வைத்தார்.

எனினும் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ..இவர்கள் என்ன பிரிவின் கீழ் இந்த பிரச்சினையை முன்வைக்கின்றார்கள் எனக்கேள்வி எழுப்பியதுடன் இதற்கு அனுமதிக்க வேண்டாம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.

எனினும் ஆளும்  தரப்பினர் தொடர்ந்தும் நளின் பண்டார  தரக்குறைவான .ஆபாசமான பேச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குரல் கொடுத்தனர். பெண்களுக்கு எதிரான இவ்வாறான வாய் மூல வன்முறைகள்,துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காது விட்டால் இந்த சபையில் பெண்களான நாம் எப்படி பேச முடியுமென ஆளும் தரப்பின் உறுப்பினர் கோகிலா குணவர்தன கேள்வி எழுப்பினர்.

அப்போது மீண்டும் எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஆபாசமான வார்த்தை,ஆபாசமான வார்த்தை என்கின்றீர்களே அது என்ன வார்த்தை என்பதனை தெளிவாக கூறுங்கள் பார்ப்போம் என்றார்.

இதனையடுத்தது எழுந்த இராஜாங்க  அமைச்சரான இந்திக்க அநுருத்த இஇ அந்த ஆபாச வார்த்தையை கூறுமாறு கிரியெல்ல கேட்கின்றார். அந்த ஆபாச வார்த்தையை மீண்டும் கேட்பதில் அவருக்கு ஏன் இந்தளவு ஆசை எனக்கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்த்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேயசிறி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அன்றைய தினம் அக்கிராசன கட்டளையை மீறினார்.முஜிபுர்  ரஹ்மான்  குடு விற்பவர் எனக்கூறினார் என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ..ஆளும் தரப்பு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான சீதா அரம்பபொல,கோகிலா குணவர்தன,கீதா குமாரசிங்க ஆகியோரின் வீடுகள் ஆர்பாட்டக்காரர்களினால் தீ வைக்கப்பட்டன. இந்த பாராளுமன்றத்தில் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியம் என்று ஒன்றுள்ளது. ஆனால் அவர்கள் ஏன் இவர்களுக்கு குரல் கொடுக்க முடியவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.

இதன்போது மீண்டும் எழுந்த கோகிலா குணவர்தன  பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்கு எதிரான வாய் மூல வன்முறைகள்,துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதால் எமக்கு சபையில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எமது பாதுகாப்பபு சுதந்திரம்  உறுதிப்படுத்தப்பட வேண்டும். திஸ்ஸ குட்டி ஆரச்சிக்கு நடவடிக்கை எடுத்துபோல் நளின் பண்டாவிற்கும்  எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நளின் பண்டார  ஒரு பெண்ணை மோசமாக  ஆபாசமாக விமர்சிக்கும்போது அவருக்கு பக்கத்தில் சிரித்தவாறு இருந்த ரோகினி குமாரி இப்போது நாம் பெண்களுக்க குரல் கொடுக்கும்போது  எழுந்து வெளியே சென்றுவிட்டார்.தனக்கு மட்டுமன்றி வேறு பெண்களுக்கும் அநீதி நடக்கும்போது அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

அப்போது மீண்டும் சபைக்குள் வந்த ரோகினி குமாரி விஜேரத்ன ''பெண்ணான எனக்கு இந்த சபையில் வார்த்தை துஷ்பிரயோகம் நடந்த போது நீங்கள் தான் சபைக்கு தலைமை தாங்கினீர்கள். (பிரதி சபாநாயகர் அஹித் ரஜபக்ஸ)அப்போது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. இங்கு சர்ச்சைக்குரிய வார்த்தையாக ''மலக்கழிவு  லொறி '' என்ற வார்த்தை  கூறப்படுகின்றது.

''மலக்கழிவு  லொறி ''  என்ற வார்த்தை ஆண் பாலுமல்ல பெண் பாலுமல்ல .எனவே அந்த வார்த்தை ஒரு பெண்ணை இழிவு படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அத்துடன் ''மலக்கழிவு  லொறி ''கள் எம்முடன் மோதுவதனை நாமும் விரும்பமாட்டோம். ''மலக்கழிவு  லொறி ''களைக் கண்டால் நாமும்விலகித்தான்  செல்வோம்''என்றார்.

இந்த தர்க்கத்தை முடிவுக்கு கொண்டுவர சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்  பலமுறை முயன்றும் முடியவில்லை.இறுதியில் இவ்விடயத்தை நான் சபாநாயகரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வேன் என உறுதியளித்து தர்க்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17