புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் - விஜித்த ஹேரத் எச்சரிக்கை

Published By: Digital Desk 5

09 Dec, 2022 | 04:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சுறுட்டிக்கொள்ளும் நோக்கத்திலேயே அரசாங்கம் வற்வரியை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றது.

அத்துடன் வரி அதிகரிப்பால் எதிர்காலத்தில் நாட்டில் இருக்கும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் இருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரி குறைப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. அதனால்தான் கோத்தாபய ராஜபக்ஷ்வின் செனபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தில் வற் வரியை நூற்றுக்கு 8வீதம் வரை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரியை குறைத்துவிட்டு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். 2019இல் வற்வரியை குறைப்பதற்கு எந்த தேவையும் இருக்கவில்லை. இந்தளவு பொருளாதார நெருக்கடி மக்களுக்கு அன்று இருக்கவில்லை. 

ஆனால் அரசாங்கத்து்க்கு இருந்துவந்த வருமானத்தை இல்லாமலாக்கி, தற்போது பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு, மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அரசாங்கம் வரிமீது வரி அதிகரித்து வருகின்றது.

பொருளாதாரம் தொடர்பாக பிழையான தீர்மானங்களை மேற்கொண்டு பொருளாதாரத்தை கொலை செய்த அஜித் நிவாட் கப்ரால், இதனை அன்று நியாயப்படுத்தி வந்தார்.

பொருளாதாரம் தொடர்பாக புத்தகம் எழுதுகிறார். அவரின் புத்தகத்துக்கு பொருளாதாரத்தின் கொலையாளி என்றே பெயர் வைக்கவேண்டும். 

வற் வரி என்பது மறைமுக வரி, அதனால் அனைத்து துறைகளும்  பாதிக்கப்படுகின்றது. சிறிய, மத்திய அனைத்து தொழிற்சாலைகளும் இதனால் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் வற்வரியை அதிகரித்து நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும் சுறுட்டிக்கொள்ளவே முயற்சிக்கின்றது.

அரசாங்கம் வரியை அதிகரித்து அடுத்த வருடம் நாட்டின் வருமானத்தை 315 பில்லியனாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு காட்டலாம்.

ஆனால் அடுத்த வருடத்தில் எமது தொழிற்சாலைகள் மூடப்பட்டு,  மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும். 

சுற்றுலா தொழிலை மேற்கொண்டுவருபவர்கள் லீசிங் முறைக்கு பெற்றுக்கொண்டுள்ள சிறிய வாகனங்களின் பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வாகனத்தை வங்கிக்கு உடமையாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலையில் லீசிங் நிறுவனங்கள் லாபமடைந்து வருகின்றன. இது எவ்வாறு முடியும்.? அதனால் அரசாங்கம் லீசிங் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வியாபாரிகளின் லீசிங் பணத்தை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று அரசாங்கம் அதிகரித்திருக்கும் பெறுமதி சேர் வரி காரணமாக நாட்டில் இருக்கும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். 

அதனால்தான் இன்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள் இந்த வரி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15