காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் : நிலைமை முற்றாக மாற்றமடையவில்லை ; முகக்கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 3

09 Dec, 2022 | 01:45 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நேற்று (08) உடல் நிலைக்கு ஒவ்வாத வகையில் காற்று மாசடைவு பதிவாகியிருந்தது. இதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் பலவற்றிலும் பனி மூட்டம் போன்ற தெளிவற்ற சூழல் காணப்பட்டது. 

எவ்வாறிருப்பினும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நிலைமை முற்றாக மாற்றமடையவில்லை என்பதால் வெளியிடங்களுக்குச் செல்பவர்களை தரமான முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் , அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சுற்றாடல்துறை அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று மாசடைதல் தொடர்பான கண்காணிப்பு பிரிவினால் காற்றானது , தரக் குறியீட்டின் அடிப்படையில் வெவ்வேறு நிறங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. அதற்கமைய பச்சை நிறக் குறியீடு ஆரோக்கியமான காற்றையும் , மஞ்சள் நிறம் ஓரளவு துய்மையான காற்றையும், பழுப்பு நிறம் ஓரளவு ஆரோக்கியமற்ற காற்றையும் குறிக்கிறது.

இதேபோன்று செம்மஞ்சள் நிறம் ஆரோக்கியமற்ற காற்றையும் , மெஜெந்தா நிறம் மிகவும் ஆரோக்கியமற்ற காற்றையும் , சிவப்பு நிறம் அபாயகரமான காற்றையும் குறிக்கிறது.

அதற்கமைய அம்பாந்தோட்டை, பதுளை, கேகாலை மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கு ஆரோக்கியமற்ற காற்று (செம்மஞ்சள் நிறம்) காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு புத்தளம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் காற்று மாசடைவு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதால் அந்த பகுதிகள் பச்சை நிறக் குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் இருந்து அதிகளவு தூசு படிந்த காற்று இலங்கை நோக்கி வீசியமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக இந்தியாவில் இருந்து தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதாக  தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக காற்று மாசு தரக்குறியீடானது அதிகரிப்பதால், சுகாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைவு, சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. காற்று மாசடைந்து காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தரமான முகக்கவசங்களை அணிந்து வெளியில் நடமாடுவதே உகந்தது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் , 'கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி மற்றும் வவுனியா ஆகிய நகரங்களிலேயே தூய்மையற்ற காற்று அதிகரித்துள்ளது. உண்மையில் இது இலங்கையால் கட்டுப்படுத்தக் கூடிய நிலைமையல்ல. இது நாடுகளை ஊடுருவிச் செல்லும் வளிமண்டல மாசு நிலைமையாகும்.' என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58