ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை விரைவில் செயற்படுத்த வேண்டும் - சஜித் சபாநாயகரிடம் சபையில் கோரிக்கை

Published By: Vishnu

09 Dec, 2022 | 01:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 61 என எடுத்த தீர்மானத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்தும் காலம் தாழ்த்திக்கொண்டிருக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (09) வெள்ளிக்கிழமை காலை 9,30 மணிக்கு  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே  எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சபாநாயகர் தலைவமையில் இடம்பெற்ற பணியாளர் ஆலோசனை குழுவுக்கு என்னையும் அழைத்திருந்தது. அந்த குழுவில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருந்தேன். சபாநாயகர், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் அழைக்கப்பட்டிருந்தார். 

அந்த குழுவுக்கு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 எனவும் 63 எனவும் இரண்டு பிரேரணைகள் வந்தன. என்றாலும் பாராளுமன்ற சேவைக்கு விசேட சலுகை வழங்கி பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதியும் சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் ஓய்வு பெறும் வயது 60ஆகவே இருந்தது. எனறாலும் 63 என்ற பிரேரணையும் இருந்ததால், இந்த இரண்டுக்கும் பொதுவாக 61வயது என நாங்கள் தீர்மானித்தோம்.

அதற்கு குழுவில் இருந்த சபாநாயகர், அமைச்சர் சுசில் மற்றும் நானும் அதற்கு கைச்சாத்திட்டோம். இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இதற்கு கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தார். ஆனால் அவர்  கைச்சாத்திடவில்லை. அது அவரது உரிமை.  அதனால் இந்த விடயம் தற்போது செயற்படாமல் இருக்கின்றது. 

எனவே மூன்று பேர் கைச்சாத்திட்டுள்ளதால் ஓய்வூதிய வயதை 61 என தெரிவித்து, அதனை செயல்படுத்த வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜனாதிபதிக்கு பதிலாகவே நான் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.  ஓய்வூதிய வயது 65என்ற கொன்கையிலேயே நாங்கள் இருந்தோம். 

என்றாலும் திடீரென 60வயது என்ற தீர்மானத்துக்கு வந்ததால், எங்களுடன் பணியாற்றி வரும் பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே இருக்கின்றனர்.

அதனால் 65 என்ற கொன்கை ரீதியிலான தீர்மானத்தை பாராளுமன்றம் மாற்ற முடியாது என்பதே திறைசேரியின் நிலைப்பாடாகும். அதன் பிரகாரமே நான் செயற்படுகின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைலர் சஜித் பிரேமஜயந்த, அவரது நிலைப்பாட்டில் அவர் இருப்பது, அது அவரது உரிமை.

என்றாலும்  குழுவில் 3பேர் இணக்கம் தெரிவித்து 3பேர் கைச்சாத்திட்டிருக்கின்றனர். அதனை அனுமதித்து விரைவில் செயல்படுத்துமாறு சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என்றார்.

இறுதியாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04