சீனாவில் மாணவர்கள் போராட்டம்

Published By: Vishnu

09 Dec, 2022 | 01:27 PM
image

சீனாவின் சில நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கொரோனா ஊரடங்கும் முடக்கமும் அமுலில் உள்ளது.

ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளை சந்தித்து வந்த மக்களுக்கு சீன அரசின் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த வாரம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து சில நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை சீன அரசு தளர்த்தியது. ஆனால், இன்னும் 53 நகரங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளன. 

சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியானது. இங்குள்ள மாணவர்கள் பல மாதங்களாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.  அதே போன்று பல்கலைகத்திற்குள் வெளியிலிருந்து செல்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனை கண்டித்து குளிர்கால விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மாணவர்களே இவ்வாறு போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

அப்போது ஒரு மாணவர், ''உங்களுக்கு அதிகாரம், நாங்கள் கொடுத்தது. எங்கள் மீது கை வைத்தால், ஃபாக்ஸ்கான் ஐபோன் ஆலையில் ஏற்பட்டது போன்ற போராட்டம் வெடிக்கும்'' என எச்சரிக்கை விடுத்தார். 

கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேபோல் பெய்ஜிங் நகரில் உள்ள சிங்குவா மற்றும் பெகிங் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மாத இறுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான போராட்டங்களை கட்டுப்படுத்த சீன கடும் நடவடிக்கைளை எடுத்து வருவதுடன் சமூக வலைத்தளங்களில் போராட்டங்கள் குறித்த எவ்வித தகவல்களும் கசிந்து விடாதவாறு கடுமையான இணைய பாதுகாப்பை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52