முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்த முனையும் தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவது வெட்கமான செயலாகும்

Published By: Ponmalar

08 Dec, 2016 | 05:38 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கும் பௌத்த தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவதானது வெட்கமானதும் வேதனையானதுமான செயலாகும் என அமைச்சர் ரிசாத்  பதியூதீன்  சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு சுற்றுலாத்துறை அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் கடும் போக்குடன்  செயற்படுகின்றார். தமிழ் சகோதரர்களை திட்டுகிறார். இவ்வாறு தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீது கடும் போக்குடன் செயற்படும்  பௌத்த தேரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்த முயலும்  கடும் போக்கான தேரர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதானது மிகவும் வெட்கத்துக்குரியதும் வேதனையானதுமான விடயமாகும். 

அவ்வாறான செயற்பாட்டை  பார்க்கும் போது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சட்டம் என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56