பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Published By: Digital Desk 3

09 Dec, 2022 | 11:40 AM
image

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு  தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

முப்படைகளின் அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கும் பாதுகாப்பு கல்வித்துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவிநிலை என்ற இரண்டு பிரிவுகளிலும் தொழில்முறை அறிவையும் புரிதலையும் வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும். 

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கற்கை நெறி 16 இல் பங்கேற்ற,  இலங்கை இராணுவத்தின் 76 அதிகாரிகள், இலங்கை கடற்படையின் 26 அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் 25  அதிகாரிகள்  இதன்போது பட்டங்களைப் பெற்றனர். இதனைத் தவிர பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ஓமான், ருவாண்டா, சவூதி அரேபியா, செனகல் மற்றும் செம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகளும் இங்கு பட்டங்களைப் பெற்றனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன , இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே,  பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக்  கல்லூரியின் பீடாதிபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50