கொழுப்பு எனும் கொலஸ்ட்ராலை சமநிலையில் ஏன் வைத்திருக்க வேண்டும்?

Published By: Digital Desk 5

09 Dec, 2022 | 11:49 AM
image

இன்றைய சூழலில் நாம் அனைவரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு கொண்டிருக்கிறோம்.

இதன் காரணமாக இணை நோய்கள் எனப்படும் நீரிழிவு, குருதி அழுத்த பாதிப்பு, கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு என பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கிறோம்.

எம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ரால், இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால், அதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்தும், அதனை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு என்பது எம்முடைய ரத்தத்தில் காணப்படும் ஒரு வகையான மெழுகுத் தன்மை கொண்ட பொருள். ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதில் கொழுப்பு பாரிய பங்களிப்பு செய்கிறது.

ஆனால் அதே தருணத்தில் இந்த கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாகிவிட்டால், இதயம் சார்ந்த நோய்களை உருவாக்கி விடும்.

கொலஸ்ட்ரால் உங்களுடைய இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உண்டாக்குகிறது. இறுதியில் இந்த படிவுகள் தேக்கமடைந்தும், வளர்ச்சியடைந்தும் உங்கள் தமனி வழியாக ரத்த ஓட்டம் செல்வதற்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடை உண்டாகிறது.

சில தருணங்களில் சிலருக்கு அவர்களுடைய ரத்த நாளங்களில் படிந்திருக்கும் இந்த கொழுப்பு படிவுகள், திடீரென சேதமடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை உண்டாக்கும் வகையிலான உறைவுத்தன்மையையும் உண்டாக்கி விடுகிறது.

அதனால் உடலில் கொழுப்பின் அளவு குறித்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் முறையாக பரிசோதனை செய்து, அதன் அளவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பது மரபியல் காரணமாக இருக்கக்கூடும். இவர்கள் தொடர்ச்சியாக வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால்.., அதனை வைத்தியர்களின் ஆலோசனையை முறையாகப் பின்பற்றினால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதற்கு முன் எம்முடைய கொலஸ்ட்ரால், நன்மை பயக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் தீமை பயக்கும் கொலஸ்ட்ரால் என இரண்டு வகை உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நன்மை பயக்கும் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி கொள்வதிலும், தீமை விளைவிக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதே தருணத்தில் சர்க்கரை நோயாளிகள், இரத்த கொதிப்பு நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்கள்... இவர்கள் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று கொலஸ்ட்ரால் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், உணவு கட்டுப்பாடு போன்றவற்றை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.  புகைப்பிடித்தலையும், மது அருந்துதலையும் முற்றாக தவிர்க்க வேண்டும்.

டொக்டர் சுசில்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04