மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மறைக்க இடமளிக்கமாட்டோம்  

Published By: Ponmalar

08 Dec, 2016 | 04:35 PM
image

(பா.ருத்ரகுமார்)

வரவு செலவுத்திட்ட விவாதத்தின்  பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மத்திய வங்கி பிணைமுறி விநியோக விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் குறித்த விடயத்தில் இடம்பெற்ற மோசடியை மறைப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம் எனவும் நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிணை முறி விநியோக மோசடியை மறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு வழியிலும் சந்தர்ப்பத்தை வழங்காது. மத்திய வங்கியின் முதன்மையான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அதனை நிச்சயம் வெளிக்கொணரவேண்டும். அதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

இந்நிலையில் தற்போது வரவுச்செலவுத்திட்ட விவாதம் நடைபெறுகின்றது. இதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் பிணைமுறி விடயம் தொடர்பான விவாதம் நடைபெறும். எந்தவொரு மக்கள் பிரச்சினையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்பிலும் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பிலும் நிச்சயம் பதில் வழங்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58