2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Published By: Vishnu

09 Dec, 2022 | 10:05 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பில் மொத்தமாக 19பேர் கலந்துகொண்டிருக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.

அதன் பிரகாரம்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலான 7 நாட்கள்  இடம்பெற்றன. 

அதன் பிரகாரம் அன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக  121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் கடந்த 23 ஆம்  திகதி  புதன்கிழமை ஆரம்பமாகி, 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6,45 மணியளவில் முடிவுக்கு வந்தது. 

அதன் பிரகாரம் வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு பாராளுமன்றம் இணக்கமா என சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பை கோரினார். 

அதன்பிரகாரம் வாக்கெடுப்புக்காக கோரம் மணி ஒலிக்கப்பட்டு,வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 80 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. 

அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஐ.ம.ச., விமல், த.தே.ம.மு. மற்றும் டலஸ் அணி எதிர்த்து வாக்களிப்பு

வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் விமல் அணி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து எதிர்த்தரப்புக்கு மாறிய டளஸ் அழக்கப்பெரும தலைமையிலான குழுவினர், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு எதிராக வாக்களித்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்த்து வாக்களித்த போதும் துமிந்த திஸாநாயக்க, ஜோன் செனவிரத்ன பிரியங்கர ஜயரத்ன, ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். இருந்தபோதும் சுயாதீன அணடி உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே, மற்றும் நிமல் லான்சா ஆகியோர் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வாக்களிப்பை தவிர்த்துக்கொண்ட தமிழ் எம்.பிக்கள்.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் விக்கினேஷ்வரன் எம்.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். வேலுகுமார் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டபோதும் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். 

  தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை

விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டபோதும் வாக்கெடுப்பில்  பங்கேற்கவில்லை. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் ஏ,எல்,எம். அதாவுல்லாவும் ஆதரவாக வாக்களித்திருந்தார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04