மின்கட்டணம் தொடர்பில் தீர்மானிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஜனாதிபதி

08 Dec, 2022 | 06:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என தெரிவிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பாராளுமன்றம் அவர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும். பொது நிறுவனங்களின் தலைவர்கள் இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08)  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட மூலத்தை தயாரித்தது நான். அதனால்  அதில் இருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் என்க்கு நன்கு தெரியும்.

எனது அமைச்சுக்கு கீழே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இருக்கின்றது. அதனால் அதன் தலைவர் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவரை என்னை சந்திக்குமாறு தெரிவிக்க இருக்கின்றேன்.

மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு தெரிவிக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது  அப்படியானால் பொருளாதாரத்தை எப்படி முன்னுக்கு கொண்டுசெல்வது?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரே ரில்லியன் நிறுவனத்தின் தலைவர். அவருக்கு பல தொடர்மாடி குடியிருப்புகள் இருக்கின்றன. அதனால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அவருக்கு செலவு அதிகரிக்கும்.

அதுதான் பிரச்சினை. அவர் என்ன செய்திருக்கவேண்டும், மின் கட்டணம் அதிகரித்தால் அந்த கூட்டத்துக்கு நான் வரமாட்டேன் என்ற ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை. அதனால் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர். 

அதனால் இந்த விடயத்தை நான் பாராளுமன்றத்துக்கு விடுக்கின்றேன். பாராளுமன்றம் அவர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும். பொது நிறுவனங்களின் தலைவர்கள் இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58