நகர - வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரசன்ன ரணதுங்க பணிப்பு

Published By: Nanthini

08 Dec, 2022 | 05:14 PM
image

கர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்நிலையில் அவர் தெரிவிப்பதாவது,

இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை 48,491 மில்லியன் ரூபாவாகும். இதில் 2,744 மில்லியன் ரூபா தொடர் செலவுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

மொத்த தொகையில் 43,740 மில்லியன் ரூபா அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 20,433 மில்லியன் ரூபாவும், வீடமைப்பு அபிவிருத்திக்காக 16,057 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு 7,250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 4 திணைக்களங்களுக்கு மொத்தமாக 2007 மில்லியன் ரூபா ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தற்போது 'உங்களுக்கு வீடு; நாட்டுக்கு நாளை'  உதவி வீடமைப்புத் திட்டம், சபிரி அடுக்குமாடி வீடமைப்புத் திட்டம், சபிரி கிராமத் திட்டம், நடுத்தர வர்க்க பசுமை அடுக்குமாடித் திட்டம், நிழல் உதவி வீட்டுத் திட்டம், சோலார் பேனல் வீட்டுத் திட்டம், பழைய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் போன்ற பல வீட்டுத் திட்டங்களை செயல்படுத்துகிறது.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 100 நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 183 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

மேலும், குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்கள், மலிவு வீட்டுத் திட்டங்கள், நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்கள், நகர்ப்புற மறுமலர்ச்சிக்கான ஆதரவுத் திட்டங்கள் போன்ற திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தை நிர்வகித்து, அடுத்த வருடம் இந்தத் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

மேலும், கொவிட் 19 நோய்க்குப் பின்னரான சூழ்நிலையிலும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறையை பாதுகாத்து, அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி, புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் செயல்படுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16