பலத்த காற்றினால் பதுளையிலும் சேதங்கள்: 26 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Published By: Nanthini

08 Dec, 2022 | 05:04 PM
image

துளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை (டிச. 7) பலத்த காற்று வீசியதால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இன்றும் காலை வீசிய பலத்த காற்றினால் பசறை, நமுனுகுலை வீதியில் 12ஆம் கட்டைப் பகுதியிலும், அம்பலம் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் பசறை - பண்டாரவளைக்கான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

அங்குள்ள மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஹொப்டன் 19ஆம் கட்டை பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்றார்.

இந்நிலையில் அவர் லுணுகலை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனைச் சாவடியின் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் சோதனைச் சாவடியும் சேதமடைந்துள்ளது.

மேலும், ஜனதாபுர பகுதியில் உள்ள வீதியில் மின்கம்பமொன்று முறிந்து விழுந்ததால் லுணுகலையில் இருந்து ஜனதாபுர ஊடாக மடூல்சீமை செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் நமுனுகுலை பொலிஸ் நிலையத்தின் கூரைகளும் காற்றினால் சேதமடைந்துள்ளது. 

மேலும், நமுனுகுலை பகுதியில் பம்பரகல பத்தன, கந்தசேன, இந்துகல, பிங்கராவ, கனவரல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டுக் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, சில வீடுகளின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

பசறை பகுதியில் கோணக்கலை மேற்பிரிவில் உள்ள ஒரு வீட்டின் மீதும் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீடும், சில வீட்டுக் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

மீதும்பிடிய, எல்டப், டெமேரியா, மீரியபெத்த, கமேவெல, ஆக்கரத்தன்ன, பசறை நகர், மடுல்சீமை, றோபேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றினால் கூரைகள் சேதமடைந்துள்ளன. 

அத்தோடு பசறையிலிருந்து இங்குருகடுவ செல்லும் வழியாக புத்தல செல்லும் வீதியில் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் அந்த பகுதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலில் ஈடுபடுவோரும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலில் ஈடுபடுவோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இத்தகைய சூறாவளி அனர்த்தம் காரணமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02