பொருளாதார ரீதியில் முன்னேற விஞ்ஞான துறையில் வளர்ச்சி வேண்டும் - யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி

Published By: Vishnu

08 Dec, 2022 | 04:49 PM
image

பொருளாதார ரீதியில் முன்னேற விஞ்ஞான துறையில் வளர்ச்சி வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதியும் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தில் முன்னாள் தலைவருமான வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாண விஞ்ஞான கூடத்தில் இன்று (08) வியாழக்கிழமை  இடம் பெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போது இதனை  தெரிவித்தார்,

பொருளாதார ரீதியில் நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டுமேயானால் விஞ்ஞான துறையில் நாங்கள் கட்டாயமாக வளர்ச்சி காண வேண்டும் பாடசாலை மட்டங்களில் விஞ்ஞானரீதியான போட்டிகள் ஒரு பாலமாக அமைகின்றன.

இந்த பாலத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும் சிறிய பாடசாலைகள் பெரிய பாடசாலைகள் இல்லாது வர்க்கம் அல்லாது அனைத்து பாடசாலைகளும் இதில் இணைந்து கொள்ள வேண்டும் அவர்களுடைய மாணவர்களை இதில் பங்குபற்றஊக்குவிக்க வேண்டும். 

பாடசாலை மாணவர் மத்தியில் விஞ்ஞான பாட அறிவை வளர்க்க வேண்டும் இந்த நிகழ்வுகளினை செய்வதற்கு தேவையான நிதி உதவிகளையும் ஆதரவினையும் இரண்டு நிறுவனங்கள் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன பல வருடங்களாக இந்த நிதி உதவியினை வழங்கி வருகின்றார்கள்.

இன்றைய  காலத்தில்  விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளை தெரிவு செய்பவரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது.

இதனை விருத்தி செய்வதற்காக முக்கியமாக விஞ்ஞானபீடத்தினால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதனை விட கூடுதலாக மாணவர்கள் அவர்களுடைய எதிர்காலத்தில் என்னவாக வரப்போகிறார்கள் என்ற சம்பந்தமான பல விழிப்புணர் நடவடிக்கைகளை திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

முக்கியமாக போதைப் பொருள் பாவனைக்கு உள்ளாகியுள்ள நிலையினை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கை முறைமையினை விருத்தி செய்வதற்கு அந்த வாழ்க்கை திறனைசிறப்பாக கொண்டு போவதற்கான முயற்சிகளை செய்வதிலும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் அதனூடாகவும் இவர்களுடைய எதிர்காலத்தில் என்னவாக பெறப்போகின்றார்கள் என்பதனை விருத்தி செய்வதற்கான முயற்சிகளையும் பல்கலைக்கழகம் அனைத்து பீடங்களுடன் இணைந்த திட்டமாக சமூகத்திற்கு எடுத்து செல்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11