கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பிணையில் விடுதலை

Published By: Vishnu

08 Dec, 2022 | 03:21 PM
image

கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான்  நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமான கடல் அட்டைப் பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மீனவ குடும்பங்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கானது இன்று (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது. இந்த மீனவர்கள் சார்பில் நான் ஆஜராகியிருந்தேன்.

இன்றையதினம் நாங்கள் நீதிமன்றத்திலே பொலிஸாருடைய வழக்கை எதிர்த்து குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81ஆம் பிரிவின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்றும், இதில் அப்பாவி மீனவர்களுடைய வாழ்வாதாரமும் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்றபடியால் சட்டவிரோதமாக எந்தவிதமான அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டை பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள் என்றும், ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை 81 வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கொண்டுவர முடியாது என்றும் சுட்டிக்காட்டி வாதாடியிருந்தோம்.

அந்த அடிப்படையில் இன்றையதினம் சந்தேக நபர்களாக முற்படும் தப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணை கடலட்டை பண்ணையாளர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கட்டளையிட்டிருந்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10