இந்தியாவின் 5 மாநில இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 10:56 AM
image

இந்தியாவின் 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (டிச.08) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதேபோல், 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் இன்று நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதேபோல், ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர், பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவை அடுத்து நடைபெற்ற மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது மருமகளும், உத்தரப்பிரதசே முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் பாஜக, ரகுராஜ் சிங் சாக்யா என்பவரை களமிறக்கியது. 

மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டை என கருதப்படுவதால், இந்த தேர்தலில் டிம்பிள் யாதவின் வெற்றி அக்கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10