2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று !

08 Dec, 2022 | 07:24 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை (டிச. 08) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.

அதன் பிரகாரம்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை வரையிலான 7 நாட்கள்  இடம்பெற்றன.

செவ்வாய்க்கிழமை மாலை  6 மணிக்கு  இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

இதில் அரசுடன் இணைந்து  எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன்  ஆகியோரும் எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செவிரத்ன ஆகியோரும் வாக்களித்தனர்.

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளான  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய மக்கள் சக்தி (ஜே வி.பி.),கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வாக்களித்தனர்.

 அதேபோன்று எதிரணியில் உள்ள ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவி்ல்லை. என்றாலும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பதில் தவிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம்   கடந்த 23 ஆம்  திகதி  புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று வியாழகிழைமை (டிச. 08) மாலை 5 மணியுடன் நிறைவடைந்ததுடன் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41