வரவு - செலவுத் திட்டத்தில் ஒருசில திருத்தங்களை முன்னெடுத்தால் 300 பில்லியன் ரூபா வரை வரி வருமானம் - எம்.ஏ.சுமந்திரன்

Published By: Digital Desk 2

07 Dec, 2022 | 09:57 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரம் ஒடுங்கு நிலையில் காணப்படும் போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒருசில திருத்தங்களை முன்னெடுத்தால் 300 பில்லியன் ரூபா வரை வரி வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒருசில விடயங்களை திருத்தியமைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில்  புதன்கிழமை (டிச. 07)  இடம்பெற்ற 'சர்வஜன நீதி' ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அரச வருமானத்தை அதிகரிப்பதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது இருப்பினும்நடைமுறைக்கு சாத்தியமான எந்த பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை. மாறாக வரி அதிகரிப்பை தீவிரப்படுத்தும் வகையில் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள்தற்போதைய நிலையை காட்டிலும் பன்மடங்கு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும்.

செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதும் நடுத்தர மக்களை மோசமான ஏழ்மை நிலைக்கு கொண்டு செல்லும் பரிந்துரைகள் இந்த பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளன.

நாட்டின்பொருளாதாரம்ஒடுங்கு நிலையில் காணப்படும்போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஒருசில திருத்தங்களை முன்னெடுத்தால் 300 பில்லியன் ரூபா வரை வரி வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சீனி வரி மறுசீரமைக்கப்பட வேண்டும்.நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு செலவுத்திட்டத்தில் ஒருசில விடயங்களை திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51