அல் கைய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லாடனின் மெய்ப்பாதுகாவலரான நஸீர் அல் பஹ்ரி நீண்டநாள் சுகவீனம் காரணமாக காலமாகியுள்ளார்.

யேமனை சேர்ந்த பஹ்ரி நாட்டின் தென்பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில்,இவர் காலமாகியுள்ளார்.

அபு ஜண்டால் என அறியப்பட்ட பஹ்ரி, ஒசாமா பின் லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்த போது அவரின் சாரதியாகவும் பணியாற்றியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு குவண்டனாமோ சிறைச்சாலையில் இருந்து  நஸீர் அல் பஹ்ரி விடுவிக்கப்பட்டார்.