போர்த்துக்கல் - சுவிட்சர்லாந்து மோதும் போட்டியுடன் நிறைவடையும் 2 ஆம் சுற்று உலகக் கிண்ணப் போட்டி

Published By: Digital Desk 5

07 Dec, 2022 | 10:09 AM
image

(நெவில் அன்தனி)

ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல்லுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறவுள்ள போட்டியுடன் கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண இரண்டாம் சுற்று நிறைவடையவுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வராற்றில் இந்த இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த வருடம் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் நடத்திய நேஷன்ஸ் லீக் போட்டியே இந்த இரண்டு அணிகளும் சந்தித்த பிரதான போட்டியாகும்.

லிஸ்பனில் நடைபெற்ற முதலாம் கட்ட ஆட்டத்தில் போர்த்துக்கல் 4 - 0 எனவும் ஜெனிவாவில் நடைபெற்ற 2ஆம்   கட்ட ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1 - 0 எனவும் வெற்றிபெறிருந்தன.

இந்த நூற்றாண்டில் இரண்டு அணிகளும் சந்தித்த 6 சந்தர்ப்பங்களில் போர்த்துக்கல் 3 தடவைகளும் சுவிட்சர்லாந்து 3 தடவைகளும் வெற்றிபெற்றன. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆம் சுற்று உலகக் கிண்ணப் போட்டி பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும்  எனவும்   வருடத்தின் அதிசிறந்த போட்டியாக அமையும் எனவும் கருதப்படுகிறது.

2008இல் நடைபெற்ற யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் போர்த்துக்கல்லை 2 - 0 என சுவிட்சர்லாந்து வெற்றிகொண்டிருந்தது. அதுவே இந்த இரண்டு அணிகளும் அதற்கு முன்னர் விளையாடிய பிரதான கால்பந்தாட்டப் போட்டியாகும்.

1966 இலும் 2006 இலும் கால் இறுதிவரை முன்னேறிய போர்த்துக்கல் இம்முறை 3 ஆவது தடவையாக அதே நிலையை அடைவதற்கு முயற்சிக்கவுள்ளது. எனினும் கடந்த 5 உலகக் கிண்ண அத்தியாயங்களில் 2ஆம் சுற்றில் போர்த்துக்கல் தோல்வியையே எதிர்கொண்டு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து முதல் தடவையாக கால் இறுதிக்குள் நுழைவதற்கு முயற்சிக்கவுள்ளது.

நடப்பு உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது சுற்றில் ஜீ குழுவில் இடம்பெற்ற சுவிட்சர்லாந்து ஆரம்பப் போட்டியில் கெமரூனை 1 - 0 என வெற்றிகொண்ட போதிலும் 2ஆவது போட்டியில் பிரேஸிடம் 0 - 1 என தோல்வி கண்டது. கடைசிப் போட்டியில் செர்பியாவின் கடும் சவாலை முறியடித்து 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

எச் குழுவில் இடம்பெற்ற போர்துக்கல், தனது முதலிரண்டு போட்டிகளில் கானாவை 3 - 2 எனவும் உருகுவேயை 2 - 0 எனவும் வெற்றிகொண்டு 2ஆம் சுற்றுக்கான தகுதியை உறுதிசெய்துகொண்டிருந்தது. ஆனால் கடைசிப் போட்டியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக உபாதையீடு நேரத்தில் கொடுத்த கோலினால் 1 - 2 என தென் கொரியாவிடம் தோல்விகண்டது.

இந்தப் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது. எவ்வாறாயினும் இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

போர்த்துக்கல் அணியில் அதன் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிசிறந்த வீரராக இடம்பெறுவதுடன் பின்கள வீரர்களான ஜோவா கென்சிலோ மற்றும் ரூபென் டயஸ், மத்திய கள வீரர்களான புரூனோ பெர்னாண்டஸ், பேர்னார்டோ சில்வா ஆகியோர் முக்கிய விரர்களாக இடம்பெறுகின்றனர்.

அணித் தலைவரும் மத்திய கள வீரருமான 30 வயதுடைய க்ரானிட் ஸாக்கா,  சுவிட்சர்லாந்து  அணியின் தூணாக விளங்குகிறார். அவருடன் கோல் காப்பாளர் யான் சொமர், முன்கள வீரர் நோவா ஒக்காஃபோ, பின்கள வீரர் ரிக்கார்டோ ரொட்றிகஸ், மத்திய கள வீரர்களான ஸேர்டான் ஷக்கிரி மற்றும் ரெமோ ஃப்ரூலர் ஆகியோர் அணியில் இடம்பெறும் பிரதான விரர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35