தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் - சாணக்கியன்

Published By: Vishnu

06 Dec, 2022 | 08:32 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் மகாவலி காணிகள் இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுபீகரிக்கப்பட போவதாக 05 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன,

இதன்போது எழுந்த உரையாற்றிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தகுதியான தரப்பினரை தெரிவு செய்யுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும். அது சிறந்ததாக அமையும் என்றார்.

இதன்போது எழுந்த உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார். சட்டத்தின் பிரகாரம் விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58